Type Here to Get Search Results !

திறந்த போட்டிப் பரீட்சை இலங்கை நிர்வாக சேவையின் வினாத்தாள் விபரம் 2021

 இலங்கை நிர்வாக சேவையின் தரம் III (SLAS - III) ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நடாத்தப்படும் எழுத்து பரீட்சையின் வினாத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஐந்து பாடங்களை கொண்ட வினாப்பத்திரமானது ஒவ்வொண்றும் 100 புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.




இலங்கை நிர்வாக சேவையின் வினா மாதிரிகள்


01. பொது விவேகம்

02. இலங்கையின் சமூக, பொருளாதார. அரசியல் பின்னணியும் போக்குகளும்

03. உலகளாவிய போக்குகள்

04. முகாமைத்துவ உளச்சார்பு

05. ஆக்கபூர்வமான, பகுப்பாய்வு ரீதியான மற்றம் தொடர்பாடல் திறன்கள்.


பொது விவேகம் - காலம் 1 மணித்தயாலம் - 100 புள்ளிகள்

எண்கள் , மொழிசார் மற்றும் உருவ வடிவங்கள், இடைத் தொடர்களுடன் சம்பந் தப்பட்ட சிக்கல்கள் தொடர்பிலான பகுப்பாய்வுத் திறமை, தர்க்க ரீதியான விளக்கம் , பொருள் கோடல் ஆற்றல், ஏனைய நிலைமைகளுக்கு ஏற்புடையதாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் மற்றும் முடிபுகளுக்கு வருதல் தொடர்பாக பரீட்சார்த்திக்கு உள்ள புத்திக்கூர்மையை அளவிடுவது இதன் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.


இவ்வினாத்தாள் 4 தேர்வுகளுடன் கூடிய பல்தேர்வு வினாக்களைக் கொணடதாகும்.


(ii) இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியும் போக்குகளும் : காலம் 2 மணித்தயாலம் - 100 


இலஙகையின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப நிலைகள் பற்றிய விடய அறிவு அல்லது பரீட்சாத்திக்கு முன்வைக்கப்படுகின்ற சிக்கல்களுடன் தொடர்புடையதாக ஆக்கபூர்வமாக, பகுப்பாய்வு ரீதியாக மற்றும் விமர்சன ரீதியான சிந்திக்கும் ஆற்றல், முந்துரிமை பற்றிய தீர்மானிக்கும் ஆற்றல் மற்றும் உபாயமார்க்க ரீதியாக எதிர்காலத்தை எதிர்வு கூறக்கூடிய ஆற்றல் சம்பந்தமாக பரீட்சார்த்தி கொண்டுள்ள திறமைகளை அளவிடுவது இதன் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.


இவ்வினாத்தாள் 4 தேர்வுகளுடன் கூடிய பல்தேர்வு வினாக்களைக் மற்றும் கட்டமைக்கப்பட்ட கட்டுரை வினாக்களைக் கொணடதாகும்.


(iii) உலகளாவிய போககுகள் - காலம் 2 மணித்தயாலம் - 100 புள்ளிகள்.

உலகளாவிய சமூக, பொருளாதார, அரசியல் கலாசார, விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப நிலைகள் பற்றிய விடய அறிவு அல்லது பரீட்சார்த்திக்கு முன்வைக்கப் படுகின்ற சிக்கல்களுடன் தொடர்புடையதாக ஆக்கபூர்வமாக, பகுப்பாய்வு ரீதியாக மற்றும் விமர்சன ரீதியான சிந்திக்கும் ஆற்றல் , முந்துரிமை பற்றித் தீர்மானிக்கும் ஆற்றல் மற்றும் உபாயமார்க்க ரீதியாக எதிர்காலத்தை எதிர்வு கூறக்கூடிய ஆற்றல் சம் பந்தமாக பரீட்சார்த்தி கொண்டுள்ள திறமைகளை அளவிடுவது இதன் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.


இவ்வினாத்தாள் 4 தேர்வுகளுடன் கூடிய பல்தேர்வு வினாக்களைக் மறறும் கட்டமைக்கப்பட்ட கட்டுரை வினாக்களைக் கொண்டதாகும்


(iv) முகாமைததுவ உளச்சார்பு: காலம் 2 மணித்தியாலம் - 100 புள்ளிகள்.

சிக்கல்கள் மற்றும் அவற்றுகான காரணங்களை இனங் காணல் தீர்மானம் மேற்கொள்ளல் , நபர்களுக்கிடையிலான தொடர்புகளை நடாத்திச் செல்லுதல், தொடர்பாடல் திறமை, சுய ஒழுக்கக் கொள்கை மற்றும் உபாய முறைகளை

தயாரித்தல், மனவெழுச்சிசார் நுண்மதி எனும் வகையில் பரீட்சார்த்தியிடம் முன்வைக்கப்படுகின்ற சம்பவங்கள் மற்றும் சந்தர்ப்பங்களை ஆதாரமாகக் கொண்டு பரீசாரத்தியிடமுள்ள திறமைகளை அளவிடுவது இதன் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.


இவ்வினாத்தாள் 4 தேர்வுகளுடன் கூடிய பல் தேர்வு வினாக்கள் , சுருக்க வினாககள் மற்றும் கட்டமைக்கப் பட்ட கட்டுரை வினாக்களைக் கொண்டதாகும்.


(v) ஆக்கபூர்வமான, பகுப்பாய்வு ரீதியான மற்றும் தொடர்பாடல் திறன்கள் : காலம் 3ன மணித்தியாலம் - 100 புள்ளிகள்.

தரப்பட்ட தலையங்கங்கள்ஃ தொனிப் பொருள்கள் பலவற்றிலிருந்து பரீட்சார்த்தி தானாகவே தெரிவு செய்யும் தலையங்கங்கள் / தொனிப்பொருள்கள் ஊடாக கருத்துக்களையும் தகவல்களையும் பகுப்பாய்தல் , தொகுத்தல் மற்றும் சமர்ப்பித்தல் தொடர்பில் பரீட்சார்த்தி காட்டுகின்ற தர்க்க ரீதியான மற்றும் சிந்தனை சக்தியை அளவிடுதலும் இதன் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.


இவ்வினாத்தாள் கட்டுரை பகுதியளவு கட்டமைக்கப்பட்ட கட்டுரை அமைப்பிலான வினாக்களைக் கொண்டதாகும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad