Type Here to Get Search Results !

பொது அறிவு வழிகாட்டல் தொடர் 04

பொது அறிவு வழிகாட்டல் தொடர் 04


1. சிறுவர்களுக்கான இருதய நோய் சிகிச்சைப்பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு சேவைகளை மேம்படுத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்;ட “கொழும்பு லேடி ரிட்ஜ்வே” சிறுவர் வைத்தியசாலை எத்திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதி மூலம் அமைக்கப்பட்டது?

2. இலங்கைப் பாராளுமன்ற ஜனநாயகம் அமைக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தி எப்போது கொண்டாடப்பட்டது?

3. தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தினுடைய தொனிப்பொருள் என்ன?

4. 120 நாடுகளுக்கு சுமார் 3500 பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ஜி.எஸ்.பி (Generalized System of Preferences – GSP) வரிச் சலுகை எப்போதிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது?

5. நான்கு தசாப்பதங்களின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் எது?

6. 2018 ஆம் ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற “இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா” மாநாடு எங்கு நடைபெற்றது?

7. இலங்கையின் முதலாவது உள்நாட்டு விமான சேவை 2018 ஆம் ஆண்டு இலங்கையின் எப்பாகத்தில் ஆரம்பிக்கப்படடது?

8. பொதுநலவாய டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையம் எங்கு அமைந்துள்ளது?

9. “யசோதரா பீம்பாதேவி” என்ற (2018 இல் தயாரிக்கப்பட்டது) திரைப்படம் யாரால் இயக்கப்பட்டது?

10. இலங்கை தேசிய சினிமாத் துறையை போசிப்பதற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்துச் செயற்பட்ட ஓய்வுபெற்ற கலைஞர்களுக்கு தற்போது வழங்கப்படும்?

11. இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய கலையகம் எது?

12. தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையான இலங்கை – சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை எங்கு நிர்மாணிக்கபட்டுள்ளது?

13. பிரபல சமயற்கலை நிபுணர் கலாநிதி பப்ளிஸ் சில்வா அவர்களினால் எழுதப்பட்ட நூல் எது?

14. பௌத்த சாசனத்திற்கு தமது பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களின் பாதுகாப்புக் கருதி களுத்துறை ஏதகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தின் பெயர் என்ன?

15. எந்த தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளுக்கு பொருத்தமான முச்சக்கரவண்டி சேவையில் ஈடுபட்டுள்ள சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது?

விடைகள்

1.சிறிய இதயங்கள்
2. 2017
3.தேசத்தின் பிள்ளைகளை என்றும் பாதுகாப்போம்
4. 1976
5.மொரகஹந்த - களுகங்கை
6.இலண்டன்
7.மட்டக்களப்பு
8.இலண்டன்
9.பேராசிரியர் சுனில் ஆரிய ரத்ன
10. 5000
11.கண்டி குண்டகசாலை
12.பொலன்நறுவை
13.மகா சூபவங்சய
14.போசத் மாபிய செவன
15.டுக்டுக்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad