Type Here to Get Search Results !

சீன அதிபரின் யுத்த தயார் நிலை பிரகடனம்

சீன அதிபரின் யுத்த தயார் நிலை பிரகடனம்

மக்கள் சீனா என்ற வல்லரசு அந்தஸ்தை அடைந்து வரும் நாட்டின் தலைவர் ஜின் பிங் ஜனவரி 4ம் திகதி 2019 Pடுயு என அழைக்கப்படும் மக்கள் விடுதலை இராணுவத்தை யுத்த தயார் நிலையில் எச்சரிக்கையாக இருக்குமாறு கட்டளையிட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் இராஜினாமா செய்ததன் பின்னர் ஜனாதிபதி ட்ரம் தற்காலிகமாக பட்ரிக் சகைன் என்கின்ற முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரை பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வேளையில் சினத்தலைவர் சீனப்படைகளை உசார் நிலையிலிருக்குமாறு பணித்துள்ளார். போயிங் (டீழநiபெ) விமான கம்பனியில் தலைமைப் பதவிகளை வகித்தவர். நுட்பமான தொழில்நுட்ப திறமைகளை பெற்றிருந்த சனகன் அமெரிக்க வான்படையின் செயற்படுதன்மையை உயர்த்தியவர் எனக் கூறப்படுகிறது. சீன ஜனாதிபதி சின இராணுவத்தினரின் யுத்த தயார் நிலையை அதிகரிக்கும்படியும் உலகில் சமகாலத்தில் இந்த நூற்றாண்டில் முன்னொரு போதுமில்லாத வகையில் ஆபத்துக்களும் சவால்களும் அதிகரித்துக் கொண்டிருக்கும் எனக் கூறியுள்ளார்.


Pடுயு எனப்படும் (Pநழிடந டுiடிநசயவழைn யுசஅல) மக்கள் விடுதலை இராணுவம் உலகிலேயே மிகப்பெரிய இராணுவமாகும். 20 இலட்சம் இராணுவ வீரர்களை உள்ளடக்கியது. கடந்த வருடம் இராணுவத்துக்கு மேலதிகமான ஆட்சேர்ப்பும், தொடர் பயிற்சிகள், ஒத்திகைகள் நடைபெற்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் அரசியல் இராணுவ கட்டமைப்பு சோசலிச நாடு என்ற வகையில் சந்தைப் பொருளாதார முதலாளித்துவ நாடுகளிலிருந்து வேறுபட்டது. இராணுவத்துக்கான உயர்பீடம் மத்திய இராணுவ ஆணைக்குழு என்கின்ற அதிகாரங்கள் நிறைந்த சபையாகும். மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி ஜின் பிங். இலங்கை அமெரிக்க நாடுகளின் அரசியலமைப்பின் படி ஜனாதிபதி அதியுயர் இராணுவ தளபதியார். (ஊழஅஅயனெநச in ஊhநைக). சீனத்தலைவர் ஜின் பிங் பிறப்பித்த கட்டளை நேரடியாக ஒரு நாட்டைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் சர்வதேச அரசியல், இராணுவ சூழலினைப் பார்க்கும் போது அமெரிக்காவிற்கான சவாலாகவே தோன்றுகிறது.
சீன அதிபரின் இராணுவ தயார் நிலை ஆணையில் ஏதாவது மறைவான செய்தி உள்ளதா என அலசவேண்டும். இலங்கையைப் போன்ற சிறிய நாடாகவிருப்பினும் அல்லது அமெரிக்கா ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளாக இருப்பினும் இராணுவம் எப்போதுமே நாட்டைப் பாதுகாப்பதற்கு தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பது எவருக்கும் எளிதாக புரியும் விடயமாகும். அவ்வறிக்கையில் சீனத் தலைவர் உலகில் சீனாவுக்கெதிரான ஒரு குண்டோ அல்லது சன்னமோ இலக்கு வைக்கப்படாத நிலையில் படைகளை தயார் நிலையில் இருக்கும்படி ஆணையிட்டுள்ளார். நேரடியான யுத்தம் புரியாமலே சீனா சில இலக்குகளை அடைய முயற்சிப்பதாகவே தெரிகிறது. சினாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் வர்த்தகப்போர் 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறுகிறது. 


வர்த்தகப்போர் ஆயுதமோதலுக்கு வழிவகுக்குமா என்பது இன்றைய சூழலில் சாத்தியமற்றவை. ஜனாதிபதி ட்ரம் வடகொரியாவை பல வழிகளிலும் அடிபணிய வைப்பதற்கு பல மிரட்டல்களை விடுத்தார். கடைசியில் ட்ரம் - கிம் பேச்சு வார்த்தைகளில் சந்திக்கும் நில உருவாகியது. வடகொரியாவை பாராட்டிப்பேசும் நிலைக்கு ட்ரம் உள்ளாகியுள்ளார். சீனாவை பொறுத்தமட்டில் தென்சீன கடலில் நீடித்துவரும் எதிரும் புதிருமான நிலைப்பாடுகள் பதட்டத்தை அதிகரிக்கின்றன. தென்சீனக் கடலில் கனிப்பொருட்கள் பெட்ரோலியம் வேறு இயற்கை வளங்கள் நிரம்பிய தென்சீனக் கடலுக்கு சீனா, ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருண, தாய்வான் ஆகிய நாடுகள் உரிமை பாராட்டுகின்றன. தென்சீனக்கடலில் முரண்பாடுகள் சூழவிருந்தாலும் கடற்கப்பல்களின் பாதுகாப்பான கடல் பயணங்களுக்கு அமெரிக்க கடற்படை தொடர்ச்சியாக மேற்பார்வையுடன் கூடிய ரோந்துக்களை மேற்கொண்டு வருகிறது. சீனா தென்சீனக்கடல் பகுதியில் பல தீவுகளில் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து கட்டுப்பாட்டைப் பேணுகிறது. ஒரு பட்டை ஒரு பாதை திட்டத்தின் கீழ் சீனா இராணுவ பொருளாதார உளவு வேளைகளில் ஈடுபடுகிறது என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. சீனா சிறிய நாடுகளை பயமுறுத்தி கடன் சுமைக்குள் தள்ளுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறது.


வர்த்தகப் போர் தொடர்பான சூடான தீர்மானங்களும் ஏட்டிக்குப் போட்டியான வரி விதிப்புகளும் தொடர் கதையாகிவிடுமோ என்கின்ற அச்சத்தில் தற்காலிகமான தளர்வு ஏற்பட்டுள்ளது. சீனத் தலைவரும் அமெரிக்க ஜனாதிபதியும் அண்மையில் ஆர்ஜன்டீனாவில் நடைபெற்ற பு20 மகாநாட்டில் சந்தித்தபோது இருதலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர். மேலும் இறக்குமதிப் பண்டங்களின் மேல் வரி விதிப்பதில்லை என இணங்கி பங்குனி 1ம் திகதிவரை வரி அதிகரிப்பினை ஒத்திவைத்துள்ளனர். அத்திகதிக்கு முன்னதாக இருநாட்டு பிரதிநிதிகளும் தொடர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய அமெரிக்க சீன பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் தமது வரி விதிப்புக்கொள்கை அமெரிக்காவிற்கு பல்லாயிரம் டொலர்களைச் சேமிக்க உதவியுள்ளது எனவும் அமெரிக்காவின் உருக்கு கைத்தொழில்துறை நிமிர்ந்துள்ளது என கூறியுள்ளார்.
அமெரிக்கா இருதரப்பு வர்த்தகத்தில் வர்த்தக மீது அமெரிக்காவிற்கு பாதகமாகவுள்ளது என வாதாடுகிறது. இரு நாடுகட்குமிடையிலான வர்த்தகத்தில் அமெரிக்காவிற்கு 375 பில்லியன் டொலர் வரையில் பாதகமான மீதி ஏற்பட்டுள்ளது என்கிறார் ட்ரம். அமெரிக்காவின் பாதக வர்த்தகமீதியை குறைப்பதற்கு சீனாவிற்குள் மேலதிக அமெரிக்க இறக்குமதிகளை அனுமதிப்பதாக சீனா வாக்குறுதியளித்துள்ளது. பங்குனி 1ம் திகதிக்கு முன்னர் வாக்குறுதி செயற்படுத்தப்படவேண்டும். 

அத்துடன் மருந்துப்பண்டங்கள் தயாரிக்க பயன்படும் அபினின் தயாரிக்கப்பட்ட மூலப்பொருட்கள் பெருவாரியாக சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீன அரசாங்கம் அபின் தயாரிப்பினை குற்றச்செயல் என சீனாவில் பிரகடனப்படுத்தியுள்ளதால் சீனாவிலிருந்து அபின் சேர்க்கப்பட்ட பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது இல்லாதொழியும். இதன் காரணமாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செலவு குறைவடைவதால் வர்த்தகமீதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என ட்ரம் தெரிவித்துள்ளார். கணனித் துறையில் பல புரட்சிகரமான இலத்திரனியல் உற்பத்திகளை தயாரித்து வரும் மெகா கம்பனியின் அப்பிள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தி செய்து வருகிறது. இதனால் சீனா பெரும் நன்மை அடைகிறது. அப்பிள் கம்பனி அமெரிக்காவில் மேலும் முதலிட்டு உற்பத்திகளை அமெரிக்காவில் பல்வகைப்படுத்த வேண்டும் என ட்ரம் கூறுகிறார். அப்பிள் கம்பனி அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தை தலைமையகமாக கொண்ட அமெரிக்க கம்பனி என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய சீனா என முன்னர் அழைக்கப்பட்ட தைவான் அல்லது தாய்ப்பே என்கின்ற பிரதேசம் பற்றி மக்கள் சீனாவின் நீண்டகால நிலைப்பாடும் நெருக்கடி நிலை தோன்றுவதற்கு காரணமாக இருக்கக்கூடும். 1949 இல் சீனாவின் சிற்பி மறைந்த மாஓசேதுங் மக்கள் சீனாவை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தும் போது கூறிய விடயங்கள் முக்கியமானவையாகும். மக்கள் சீனாவை தாபிப்பதற்கான நீண்டகாலப்புரட்சி அப்போதய சீனத்தலைவர் சியாங்கைசேக்கின் அரசாங்கத்துக்கெதிரான ஆயுதந்தாங்கிய போராட்டமாகும். சியாங்கைசேக்கின் படைகளுடனும் அமெரிக்க படைகளுடனும் மோதலில் ஈடுபட்டு அப்படைகளைத் தோற்கடித்து செஞ்சீனாவை உருவாக்கின. சியாங்கைசேக் தாய்வானுக்கு தப்பியோடி அமெரிக்க உதவியுடன் தேசிய சீனா என்ற அரசை ஸ்தாபித்தார். அமெரிக்காவும் மேற்கு நாடுகள் சிலவும் சியாங்கைகசேக்கின் தேசிய சீனாவுக்கு ஆதரவை வழங்கின. 1971 வரை ஐ.நா சபையில் மக்கள் சீனா அங்கத்துவத்திற்கு அமெரிக்கா வீட்டோவை பாவித்து தடைசெய்தது. 1972 வரை சீனா ஐ.நா சபையில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி நிக்கன் 1972 இல் மக்கள் சீனாவை அங்கீகரித்து அமெரிக்க - சின இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினர். இரண்டு சீனக் கொள்கையை அமெரிக்கா கைவிட்டது. 1949 இல் மக்கள் சீனாவை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்திய போது தலைவர் மாஓ மக்கள் சீனா மட்டுமே ஒரேயொரு சீனா என்றும் இக்கொள்கையை அங்கீகரிக்கும் நாடுகளுடன் மட்டும் மக்கள் சீனா இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் எனப் பிரகடனப்படுத்தினார். அமெரிக்காவும் இரு சீனக்கொள்கைகளை கைவிட்டு உலகில் மக்கள் சீனாவே சீனா என அங்கீகரித்தார். சீன அரசாங்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்றுவரை இக்கொள்கையை தமது பிரதான வெளிநாட்டுக் கொள்கையாக கடைப்பிடிக்கின்றன. 

அமெரிக்க - சீன வர்த்தகப்போர் பலவிதமான கண்ணோட்டங்களை ஏற்படுத்திய போதும் சீனாவின் அபார பொருளாதார வளர்ச்சியால் சீனமக்கள் பொருளாதார சமூக அபிவிருத்திகளைப் பெற்றுள்ளனர். அமெரிக்காவில் சீனர்கள் டெக்காஸ் ஜோர்வியா, புளோரிடா ஆகிய மாநிலங்களில் நில புலன்களை கொள்வனவு செய்கிறார்கள். அமெரிக்க பொருளாதாரத்திற்கு நிலபுலன்களில் சீனர்கள் முதலீடு செய்வதால் உந்துதல் கிடைக்கிறது. முன்னர் அமெரிக்க ஐ போன்களில் முதலீடு செய்த சீனர்கள் இன்று நிலபுலன்களில் கொள்வனவு செய்வது அமெரிக்கர்களால் வரவேற்கப்படுகிறது. வர்த்தகப் போர் அமெரிக்க சீன அரசாங்களுக்கிடையில் நடைபெறுகின்றது என்பது பற்றி சீன மக்கள் அக்கறை காண்பிக்கவில்லையென்பது திண்ணமாகும். சீனர்கள் நிலபுலன்களில் முதலீடு செய்வதன் மூலம் அமெரிக்கா குடியிருப்பதற்கும், தொழில் செய்வதற்கும், வாழ்வதற்கும் பொருத்தமான பாதுகாப்பான இடம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதே வெளிப்படும் உண்மையாகும். அமெரிக்காவில் தமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை உணர்ந்துள்ளார்கள்.

அமெரிக்கா, சோவியத் ரஷ்யா ஆகிய முன்னைய இருபெரும் வல்லரசுகளும் விஞ்ஞான தொழில்நுட்பத்துறையில் அபார சாதனை புரிந்துள்ளன. சந்திரனில் முதன்முதலில் காலடி வைத்தவர் அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ரோங் என்பது சகலரும் அறிந்த விடயமாகும். (ஆடி 1969) இதற்கு முன்னதாக சோவியத் ரஷ்ய விமானப்படை அதிகாரி வான்வெளியில் சஞ்சரித்த முதலாவது மனிதன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவர். (12 சித்திரை 1961) இன்று அரசியல் இராணுவ பொருளாதார விஞ்ஞான தொழில்நுட்ப துறைகளில் வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கும் சீனா 2018 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் நிலாவின் மறுபக்கத்தில் சாங்கி என்கின்ற விண்கலத்தை தரையிறக்கி விஞ்ஞானத் துறையில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலவின் மறுபக்கத்தின் முதலாவது தரை மட்டத்திலான வர்ண புகைப்படத்தையும் அந்த விண்கலம் பூமிக்கு அனுப்பியுள்ளது. நிலவின் தற்சுழற்சியும் பூமியைச் சுற்றிவரும் வேகமும் ஒத்திசைவாக இருப்பதால் நிலாவின் ஒரு பக்கத்தை மட்டுமே நாம் பூமியிலிருந்து பார்க்கக்கூடியதாகவுள்ளது. சீனா விண்கலம் இறங்கிய நிலாவின் மறுபக்கத்தை நாம் பார்க்க முடியாது. சீனாவின் நிலாமண்டல ஆராய்ச்சித்துறை வியத்தகு சாதனை விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.

இந்தோபசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ பிரசன்னம், அமெரிக்காவின் மிரட்டல்கள் காரணமாக சீனத்தலைவர் மக்கள் விடுதலை இராணுவத்தை உசார்நிலையில் இருக்க மனு ஆணைவிடுத்துள்ளார் என கூறப்படுகின்றது.

தைவான் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்பதே 1949 இல் மக்கள் சீனா பிரகடனப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை உத்தியோகபூர்வ கொள்கையாகும். ஜனாதிபதி ஜின்பிங் பிரகடன ஆணை பிறப்பிக்கும் போது தைவான் சீனாவின் ஒரு பகுதி தைவானை பெருநிலப்பரப்புடன் எப்போது எவ்வாறு இணைப்பது என்பது சீனாவின் உள்நாட்டு விடயம். இவ்விடயத்தில் யாரும் தலையிட முடியாது எனவும் சூளுரைத்துள்ளார். சமாதானமுறையில் தைவானை அதிகாரதரப்போடு தைவானை சமாதானமான முறையில் இணைப்பது பற்றி சமாதானமுறைப் பேச்சுவார்த்தைகள் பயனளிக்காவிடின் தாம் பலத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என கூறியுள்ளார். நாம் சீனர்கள் சீனர்களுடன் போராடத் தயாரில்லை எனவும் கூறியுள்ளார். ஒரு நாடு இரண்டு முறைமைகள் என்ற கொள்கையே சீனா தைவான் விடயத்தில் கடைப்பிடிக்கிறது. சினாவின் இராணுவ தயார் நிலை தைவான் விடயத்தில் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாடுகளை இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் புகழ்வாய்ந்த கவர்ச்சிமிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன்எப்கெனடி உதிர்த்த பொன்மொழிகளை மீட்டுப்பார்ப்பது அமெரிக்க அதிபர் ட்ரமுக்கு இன்று முன் எப்பொழுதையும் விட அவசியமாக உள்ளது. உள்நாட்டுக் கொள்கைகள் எம்மைத் தோர்க்கடிக்கக்கூடும் ஆனால் வெளிநாட்டுக் கொள்கைகள் எம்மை அழித்துவிடும் என்றார் ஜோன் எப் கெனடி. பனிப்போர் காலம் முடிவுக்கு வந்த பின்னரும் அமெரிக்கா பல சூடான தளங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் யுத்தங்களை நடாத்தி வருகின்றது. இவற்றின் விளைவாக அமெரிக்க வீரர்களின் உயிரிழப்பு பெறுமதி மிக்க கோடிக்கணக்கான டொலர்கள் விரயமாதலும் யுத்த முழக்கங்களினால் தவிர்க்க முடியாதவை ஆகின்றன. அமெரிக்காவின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு சீனா மற்றும் ஏனைய நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபடும் வேளை மறுபுறமாக பெருமளவில் விரயமாக்க முடியாது என்பதே யதார்த்த நிலையாகும். அண்மையில் அதிபர் ட்ரம் சிரியாவில் இருந்து படைகளை விலக்குவது பற்றி அறிவித்திருந்தார்.  அத்துடன் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தானுக்கான விசேட பிரதிநிதியை தலிபான் இயக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துமாறு பணித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை மீளப்பெறுதல், சிறைக்கைதிகளின் பரிமாற்றம், தலிவான் இயக்கத் தலைவர்கள் மீது அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடைகளை விலக்குதல் ஆகிய விடயங்கள் தொடர்பாகவே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்க டொலர் கையிருப்பினை மேம்படுத்துவதற்கு நிச்சயமாக உதவிபுரியும்.

சீனா அதிபரின் யுத்தத்திற்கு தயார் நிலையில் இருத்தல் என்கின்ற ஆணை சர்வதேச இராஜதந்திர நகர்வாகவே விளங்குகின்றது. தற்போதய சூழலில் சீனா அமெரிக்காவுடனான வர்த்தகப்போர், தென்சீனக்கடல் முரன்பாடுகள், வடகொரிய அணுசக்தி விபகாரம், சீன பெருநிலப்பரப்புடன் தைவானை மீள இணைத்தல் ஆகியவையே சீனா எதிர்நோக்கும் வர்த்தக, அரசியல், வெளிநாட்டுக் கொள்கை சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆகும். சென்ற வாரம் சீன விண்வெளி விஞ்ஞானிகள் நிலாவின் மறுபக்கத்தில் காலடி வைத்த விடயம் ஒரு தற்செயலான நிகழ்வல்ல. அமெரிக்க, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சிகளில் சீனாவும் சளைக்காமல் விஞ்ஞான தொழில்நுட்ப அடைவுகளை பறைசாற்றியுள்ளது. நேரடியான யுத்தம் புரியாமலே தனது இலட்சியங்களை அடைவதற்கான மார்க்கமாகவே அதிபர் ஜின்பிங் யுத்த தயார் நிலைமை தோன்றுகின்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad