Type Here to Get Search Results !

வங்காளதேசம் பொதுத்தேர்தல்

          வங்காளதேசம் பொதுத்தேர்தல்

தென்னாசிய நாடான வங்காளதேசத்தில் 2018ம் ஆண்டின் இறுதியில் அதாவது மார்கழி 30இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் அவாமி லீக் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை ஈட்டிக்கொடுத்துள்ளது. கட்சியின் தலைவியும் வங்காள தந்தை எனப்புகழ் பெற்ற சேக் முஜிபர் ரகுமானின் புத்திரியும் மூன்று முறை பிரதமர் பதவியை அலங்கரித்தவருமான சேக் கசினா நான்காவது தடைவையாகவும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். பொதுத்தேர்தலுக்கு அண்மித்த காலங்களிலும் தேர்தல் தினத்தன்றும் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியக் கட்சி நடைபெற்ற தேர்தலை ஏமாற்றுவித்தையென கண்டித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் முடிவுகளை ஏற்கவில்லை. புதிதாக தேர்தல் நடைபெறவேண்டும். நடுநிலையான அரசாங்கத்தின் கீழ் புதிதாகத் தேர்தல் நடைபெறவேண்டும். தேர்தல் சாவடிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மூவர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர். வாக்காளர்கள் சாவடிகட்குள் சென்று வாக்களிக்க பல விதமான தடைகளையும் அவாமிலீக் ஆதரவாளர்கள் ஏற்படுத்தினர் எனவும் குறிப்பாக பெண் வாக்காளர்கள் பயமுறுத்தப்பட்டனர் எனவும் அவாமிலீக் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு மிரட்டப்பட்டனர் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

அத்துடன் தேர்தலுக்கு முன்னதாக 15000க்கு மேற்பட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர் எனவும் பொலிஸ், இராணுவம், நீதிச்சேவை யாவும் பக்கசார்பாக நடந்து கொண்டனர் எனவும் குற்றம் சாட்டினர். தென்னாசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை இந்திய நாடுகளின் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுகின்றன. சமாதானமான அமைதியான முறையில் ஆட்சிமாற்றங்கள் இடம்பெறுகின்றன. இருப்பினும் தோற்ற கட்சிகள் சில நொண்டிச்சாட்டுகளை கூறி வெற்றிபெற்ற கட்சியினர்க்கு களங்கங்களை கற்பிக்கின்றனர். ஜனநாயக தேர்தல்களில் சிறந்த அனுபவத்தை பெற்றிராத வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகள் குறைகாண்பத விந்தையான விடயம் அல்ல. எதிர்க்கட்சியின் தலைவராகிய கமால் குசேன பல குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும், அவரது கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. எதிர்க்கட்சிக் கூட்டணி ஏழு ஆசனங்களை மட்டும் பெற்றுள்ளது. வங்காளதேசப் பாராளுமன்றம் 350 பிரதிநிதிகளைக் கொண்டது. 300 பிரதிநிதிகள் நேரடியான தொகுதித் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட ஏனைய 50 தொகுதிகளும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தின்படி 50 தொகுதிகளும் தீர்மானிக்கப்படுகின்றன.

சேக் கசீனாவின் கட்சி 288 ஆசானங்களை கைப்பற்றி பலத்த வெற்றியை பெற்றதன் பின்னர் சென்னையிலிருந்த வெளிவரும் ஹிந்தி, ஆங்கிலத்தினசரியின் ஆசிரியதலையங்கம் கவனத்திள் கொள்ளத்தக்கது. அவாமிலீக் ஆதரவாளர்களை களிப்பூட்டவைத்துள்ளது. இத்தேர்தல் வெற்றி எதிர்வரும் தலைமுறைக்கு பெரும் மைல் கல்லாகும் இளைஞர் சமுதாயம் பழைய அரசியல் கூத்துகளில் சலிப்படைந்துள்ளது. வாக்காளர்கள் பொருளாதார அபிவிருத்திக்கு வாக்களித்துள்ளார்கள். சேக் கசினாவின் அபார வெற்றி எதிர்க் கட்சிகளை அதிரவைத்துள்ளது. வங்காளதேச தேசிய கட்சிக் கூட்டணிக்கு கமால் குசேன் தலைமை தாங்கினார். இவர் முன்னர் அவாமிலீக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி வங்காளதேச தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார்.

காலிதா சியா ஊழல் குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டு 17 வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்கின்றார். இதன் காரணமாக குசேன் தலைமை தாங்கி தேர்தல் பிரசாரத்தை நடாத்தினார். இக்கட்சியின் பலமிக்க தலைவர்களில் ஒருவராகிய காலிதா சியாவின் மகன் தாறிக் ரகுமான் நாட்டைவிட்டு வெளியேறி 2008 இலிருந்து இலண்டனில் வாழ்ந்து வருகிறார். நிதி துஷ்பிரயோகம் கொலைக்கு சதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டார். தேர்தல் ஆணைக்குழு அவாமிலீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோக பூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அதேநேரம் தேர்தல் மோசடிகள் சிலவற்றை அவதானித்துள்ளது எனவும் கூறியுள்ளது. புதிய தேர்தல்கள் நடைபெற வேண்டுமென்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. சர்வதெச தேர்தல் அவதானிப்பாளர்களுக்கு பொதுவாக தேர்தல் ஒழுங்காக நடைபெற்றது எனவும் சான்றுரைத்துள்ளது. 


2018 மார்கழி 30 ஆம் திகதி தேர்தல் மட்டுமல்ல 2014 அண்டு தேர்தலும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டன. சேக் கசீனா இரும்புப்பிடியுடன் ஆட்சி செய்கிறார் எனவும் கூறப்படுகிறது. எனினும் அடுத்த 5 வருடங்கட்கு அவர் ஆட்சிப் பொறுப்பிலிருப்பது திண்ணம். அவரது ஆட்சிக்காலத்தில் பொருளாதார விருத்தி ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில்  பொருளாதார வளர்ச்சி 7.3மூ ஆக காணப்பட்டது. உலகில் வேகமாக பொருளாதாரத்துறையில் முன்னேறும் நாடு என்ற நிலையை பிடித்துள்ளது. சேக் கசீனாவின் ஆட்சிக் காலத்தில் இந்திய பங்களாதேச நட்புறவை மேம்படுத்த இந்திய அரசாங்க எதர்க்கட்சிகளிடையே இணக்கம் காணப்பட்டது. இந்தியாவின் 'அயலவர்களின் கொள்கை' திட்டத்தின் கீழ் வங்களாதேசத்துடனான இருதரப்பு உறவுகட்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 
இந்தியாவின் கிழக்கை நோக்கிய கொள்கைத் திட்டத்தின் அம்சமாக பிம்ஸ்ரைக் பிபின் டீiஅளவநஉ (டீடீஐN - வங்களாதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம்) அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. வங்களாதேசத்திலும் இந்தியாவுடனான உறவகட்கு வங்காளதேசம் மக்களிடையே விருப்பு காணப்படுகின்றது. இந்திய தீவிரவாத இயக்க தலைவர்களுக்கு வங்களாதேச அரசாங்கம் எந்த உதவிகளையும் வழங்குவதில்லையென்ற தீர்மானமும் சில தீவிரவாத இயக்க தலைவர்களை வங்காளதேச அரசாங்கம் இந்தியாவிடம் கையளித்துள்ளமையும் இரு நாடுகட்குமிடையே நம்பிக்கையை கட்டியெழுப்பியுள்ளது. தென்னாசிய வட்டகையில் இந்தியாவுடன் பாரிய வர்த்தக உறவைக் கொண்டுள்ள நாடு வங்காளதேசம் ஆகும்.
இருதரப்பு வர்த்தகம் ஆண்டொன்றுக்கு 20 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது. 4100மஅ நீளமான நீண்ட எல்லையை கொண்ட இரு நாடுகட்கும் இடையில் சக்தி, பாதுகாப்பு, புலனாய்வு பரிமாற்றம், மக்களுக்கிடையிலான ஊடாட்டம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பத்மா பல்நோக்கு பாலம், அக்குரா அகர்தலா புகையிரத பாதை இரு நாடுகட்குமிடையிலான இணைப்பை வலுப்படுத்தியுள்ளது. வர்த்தக செலவீனத்தை குறைப்பதற்காக துறைமுகங்கள் செப்பனிடப்படுகின்றன. வங்காளதேச அணுசக்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு இந்தியா உதவுகின்றது. சைபர் தொடர்பாடலில் இரு நாடுகளும் நெருங்கி ஒத்துழைக்கின்றன. இருநாடுகட்குமிடையில் வர்த்தகத்தில் வங்காளதேசம் பெரும் பாதகமான வர்த்தக மீதியை சுமக்கின்றது. இந்த விடயத்தில் வங்காளதேசத்துக்கு சலுகைகளை வழங்குவதற்காக தென்னாசிய சுதந்திர வர்த்தகப் பிராந்திய (சார்க்) திட்டத்தின் கீழ் வங்காளதேச ஏற்றுமதிகள் இந்தியாவுக்குள் தீர்வையில்லாமல் பிரவேசிக்க 2011 இல் அனுமதிக்கப்பட்டது.

இதன் காரணமாக 2011 இல் 450 மில்லியன் டொலர் பெறுமதியாகவிருந்த ஏற்றுமதி 2018 இல் 900 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளன. இருதரப்பு வர்த்தகத்தில் வர்த்தகமீதி வங்காளதேசத்துக்கு பாதகமாகவிருப்பதற்கு காரணமாக வங்காளதேசத்தின் ஏற்றுமதிகள் மட்டுப்பாடானாவையாகவுள்ளதும் குறிப்பிடப்படுகிறது.  


வங்காளதேசத்தில் இந்தியாவின் முதலீடு 3 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 13 ஒப்பந்தங்கள் மின்சக்தி துறைகளில் கைச்சாத்தாகியுள்ளன. இந்திய கம்பனிகள் வங்காளதேசத்தில் தொழிற்றுறைகளை ஆரம்பிக்க உற்சாகமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா பல கடனுதவிகளை வழங்கியுள்ளது கிட்டத்தட்ட 8 பில்லியனுக்கு மேற்பட்ட கடனுதவிகளை வழங்க இணங்கியுள்ளது. இந்தியாவுக்கு உல்லாச பிரயாணிகளாக பெருந்தொகையானோர் வங்காளதேசத்திலிருந்து வருகின்றனர். இருநாடுகட்குமிடையில் விசா வழங்கலில் மிக நெகிழ்ச்சித்தன்மை காணப்படுகின்றது. ஆண்டொன்றுக்கு 10 இலட்சத்திற்கு மேற்பட்ட வங்காளதேச பிரஜைகள் உல்லாசப்பயணிகளாக இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். மத தீவிரவாதம், பயங்கரவாதம் முனைப்படையும் வேளையில் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் நெருங்கிய ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது. ஐளுஐளு எனப்படும் இஸ்லாமிய அரச தீவிரவாதிகட்கு எதிராக வங்காளதேசம் பல காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என இந்துப் பத்திரிகை தலையங்கம் தீட்டியுள்ளமை ஊன்றி அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.


இன்றைய வங்காளதேசம் முன்னைய கிழக்குப் பாகிஸ்தான் என்பதும் பாகிஸ்தானிலிருந்து பிர்ந்து 16 மார்கழி 1971 இல் தனி சுதந்திர நாடாக பரிணமித்தது என்பது நினைவில் இருக்கத்தக்கது. பாராளுமன்ற கபினெட் அமைச்சரவை ஆட்சி முறையிலுள்ள நாடாகும். 'உத்தியோகபூர்வமான பெயர் வங்காளதேச மக்கள் குடியரசு என்பதாகும்'. இன்றைய பிரதமர் சேக் கசீனாவின் தந்தையின் சேக் முஜிபர் ரகுமானின் அவாமிலிக் கட்சியினரின் சுதந்திரப் போராட்டத்தின் காரணமாகவே சுதந்திர நாடு உருவாகியது. இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று பெரிய யுத்தங்களில் ஈடுபட்டன. இந்தியா, பாகிஸ்தான் நாடுகட்குமிடையிலான விரோதம் வங்களாதேஷ் சுதந்திர நாடாக உருவாகுவதற்கு பங்கு செலுத்திய பிரதான காரணியாகும். பங்களாதேஷ் எல்லை நாடுகளாக இந்தியாவும் பர்மாவும் விளங்குகின்றன. டாக்கா தலைநகரமாகும். சிட்டகொங் பிரதான துறைமுக நகரமாகும். பாகிஸ்தானின் பகுதியாக அதாவது கிழக்கு பாகிஸ்தானாக விளங்கியது. ஆனால் பாகிஸ்தானுடன் நேரடி எல்லைகிடையாது. 16 கோடிக்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட நாடாகும். இந்நாட்டின் தலாவருமானம் 1750 டொலராகும். வறுமை, கல்வி, சுகாதாரம், ஊழல் ஆகிய துறைகளில் பெரும் சவால்களை எதிர்நோக்குகிறது. வங்கதந்தை என அழைக்கப்பட்ட சேக் முஜிபர் ரகுமானின் வழிகாட்டலில், தலைமைத்துவத்தில் வங்காளதேசம் உருவாகியது.

சேக் முஜிபுர் சித்திரை 1971 இல் முதலாவது பிரதமரானார். ஆவணி 1975 இல் இளம் இராணுவ அதிகாரிகள் அவரையும் குடும்பத்தினரையும் பிரத்தியேக உதவியாளர்களையும் கொலை செய்தனர். இப்படுகொலை உலகை அதிரவைத்தது. இக்கொலை நடைபெற்ற போது அவரின் இரு புதல்விகள் வங்காளதேசத்தில் இருக்கவில்லை. மேற்கு ஜேர்மனிக்கு சென்றபடியால் தப்பினர். இன்றைய பிரதமர் சேக் கசீனா ஜேர்மனியில் இருந்தபடியால் தப்பமுடிந்தது. சேக் கசீனாவும் தங்கையான சேக் ரைகானாவும் வங்காளதேசம் திரும்புவதற்கு இராணுவம் அனுமதிக்கவில்லை. இப்படுகொலையின் பின்னர் நாட்டில் அரசியல் கொந்தளிப்பு உருவாகியது. 1977 இல் இராணுவ சதி மூலம் சிவாவுர் ரகுமான் இராணுவ தலைவர் ஜனாதிபதியாக தன்னை பிரகடனம் செய்தார்.

சேக் முஜிபர் ரகுமானின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு விசாரணையில் இருந்து விடுபாட்டுரிமை வழங்கினார். வங்காளதேசத்தில் 1975 இருநது 1991 வரை இராணுவ ஆட்சி நடைபெற்றன. 1991 இல் நிண்டகாலத்துக்கு பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீண்டகாலம் இராணுவ சர்வாதிகாரியாக ஆட்சி நடாத்திய சியாகுர் ராகுமானின் மனைவி காலிதாசியா பொதுத்தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களைக் கைப்பற்றி பிரதமர் ஆனார். வங்காளத் தந்தை சேக் முஜிபர் ரகுமானின் படுகொலைக்கு பின்னால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான ஊஐயு செயலாற்றியது என அரசியல் இராஜதந்திர வட்டாரங்களில் நம்பப்படுகிறது. வங்காளதேச தேசிய கட்சி அரசாங்கம் அமைத்த காலங்களில் சீனாவுடன் நெருங்கிய நட்புறவினை வளர்த்தது.

அவாமிலீக் கட்சியின் தலைவி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்பதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அவாமிலீக் கட்சி அரசாங்கங்கள் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தனர். சீனாவுடனும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்கிறது. 2017 ஆம் சீனா 2 நீர்மூழ்கி கப்பல்களை வங்காள தேசத்திற்கு வழங்கியது. இந்தியா சற்று அதிருப்தியடைந்தது. அண்மைய காலங்களில் இந்தியா வங்'காளதேசத்திற்கு அதிக பொருளாதார உதவிகளை வழங்குகிறது. ஏனைய தென்னாசிய நாடுகளைப் போன்று சீனா, இந்தியா ஆகிய ஆசிய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியில் வங்காளதேசமும் தடுமாறுகிறது. வங்காளதேசம் சீனாவின் ஒரு பட்டை ஒரு பாதை திட்டத்தின் கீழ் சீன ஜனாதிபதி ஜின்பிங் 2016 இல் வங்காளதேசத்துக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டார். பிரதமர் சேக் கசீனா வங்காளதேஷ் அரசாங்கம் பட்டுப்பாதை திட்டத்தில் இணைவதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். சீன - வங்காளதேச இருதரப்பு வர்த்தகம் 2021 ஆம் ஆண்டு 30 பில்லியன் டொலர்களையும் மிஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சேக் கசீனா அபார வெற்றியடைந்தமை பற்றிய கருத்துக்கள் பல ஊடகங்களாலும் வெளிப்படுத்தப்படுகின்றன. அவரின் பொருளாதாரத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரித்துள்ளன. நாட்டின் பொருளாதார விருத்தி ஓங்கியுள்ளது. அவர் எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார். முனித உரிமை மீறல்கள் அவர் ஆட்சியில் இடம்பெற்றன என்று எதிர்கட்சிகளும் சில சிவில் அமைப்புகளும் குற்றம் சாட்டினாலும் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளார் என்பது தேர்தலில் நிருபிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் உள்நாட்டு பிரச்சனைகளால் றோகின்யா முஸ்லீம் மக்கள் அகதிகளாக அயல் நாடான வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்து இருந்தார்கள். இலட்சக்கணக்கான முஸ்லீம் அகதிகளே வங்காளதேசம் ஏற்றுக்கொண்டு அவர்களை அக்கறையுடன் பராமரித்ததை வங்காளதேசம் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளார்கள். இந்தக் காரணமும் சேக் கசீனாவின் கட்சி அவாமிலீக் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கான காரணம் என நம்பப்படுகிறது. 


பாராளுமன்றத் தேர்தலில் முறையீடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் ஆட்சேபிப்பதை அமெரிக்காவும் கரிசனையுடன் அவதானிக்கிறது. ஆனால் இந்தியா எதிர்கட்சியினரின் ஆட்சேபணைகள் பற்றி எவ்வித அக்கறையும் காண்பிக்கவில்லை. சேக் கசீனாவின் அரசாங்கத்துடன் மேலும் அரசியல், பொருளாதார, சமூக உறவுகளை கட்டியெழுப்பதில் கூடிய அக்கறை காண்பிப்பது இந்து பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தின் மூலம் விளங்கக்கூடியதாக உள்ளது.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad