Type Here to Get Search Results !

கட்டுரை - சமூக மாற்றத்தில் கல்வியின் பங்கு

இன்றைய நவீன யுகத்தில் கல்விக்கான அனைத்து வாய்ப்பு, வசதிகள் மற்றும் சந்தர்ப்பங்கள் என்பன திறந்து விடப்பட்டுள்ளன.  ஒருவர், துறையொன்றில் அல்லது பல துறைகளில் ஆழமாக கால் பதிக்க இது வழிவகுத்துள்ளது. சமூக மாற்றத்தினை வழிநடத்துவதிலும் பிரதான பங்கு கல்விக்கு உண்டு. சமூகத்திற்கான விழுமியங்களை உருவாக்குவதிலும் சமூக மூலதனங்கள், ஒற்றுமை, சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல், நட்புணர்வு ஆகியவற்றை சமூக கட்டமைப்புக்குள் பலப்படுத்துவதிலும் கல்வியின் பங்களிப்பு முதன்மையானது.


அனைவருக்கும் கல்வி என்பது மனித இனம் முழுவதற்கும் கல்வி வழங்குதல் என்பதை குறிக்கின்றது. இந்த அறிவியல் யுகத்தில் நாமும் இணைந்து கொள்ள, மேலும் அதன் சவால்களுக்கு ஈடு கொடுக்க வேண்டுமானால் கல்வியறிவு பெற்றிருப்பது அவசியமாகும். கல்வி, சமூகம் என்ற இரு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட எண்ணக்கருக்களாகும். கல்வி என்பது பிள்ளையின் உள்ளே இருக்கின்ற ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதால் கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகிறது. பல்வேறு கல்விசார் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுத் தருவது கல்வியாகும். அறிவு, திறமை போன்றவற்றை வழங்கி ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை போன்றவற்றை வழங்கி ஒரு முழுமையான ஆற்றல் படைத்தவனாக கல்வி மாற்றுகின்றது. ஒரு சமூகத்தின் முன்னேற்றம் சமூக நகர்வு, சமூக வளர்ச்சி, எழுச்சி, அபிவிருத்தி, என்பன அச்சமூகத்தின் கல்வியை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகிறது.

இன்றைய உலக மாற்றங்களுக்கேற்ப யுனெஸ்கோவின் "Education for all (யாவருக்கும் கல்வி)" என்ற பிரகடனம் எந்தவொரு நாட்டிற்கும், அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும். ஆர்.எஸ் பீட்டர் குறிப்பிடுகையில்; கல்வியானது பல செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தொடர் கரும நடைமுறையாகும் எனக் கூறினார். பிளேட்டோ கூறுகிறார்; கல்வியால் கிடைக்கின்ற நன்மை யாதெனில் நல்ல மனிதர்கள் உருவானது. மட்டுமல்லாது அவர்கள் நல்ல முறையில் செயலாற்றவும் பழகிக்கிக் கொள்கிறார்கள். ரூஸோ குறிப்பிடுகையில்; பிள்ளைக்கு கல்வியை தனது ஆற்றல்கள் தேவைகள் விருப்பங்கள் என்பவற்றிற்கேற்ப பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றார். கல்வி என்பது அனுபவங்களை ஒழுங்குபடுத்துவதும் மீள அமைப்பதுமாகும்.


 கற்றல் அனுபவம் மிக முக்கியமான ஒன்றாகும். கல்வியானது கற்றல் அனுபவத்தை தருகின்றது. அது மாணவரின் உடல், உள, மன வளர்ச்சி உணர்வு வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை பெற உதவுகின்றது. கற்றல் அனுபவத்தில் ஒரு நபரின் பங்கேற்பு என்பது படிப்பு, ஆய்வுகள், விளையாட்டு, செயற்திட்டத்தில் ஈடுபடுதல், விவாதத்தில் பங்கேற்பு, குழு வேலை போன்றவற்றில் காணப்படுகிறது. மகாத்மா காந்தி கல்வி பற்றி தனது கருத்தில் கல்வியானது சகல பிரிவுகளிலும் தனியாளிடமுள்ள ஆற்றல்களில் உச்ச விருத்தி கல்வி மூலம் நிறைவேற்றப்படல் வேண்டும் எனக் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad