Type Here to Get Search Results !

"மனித சுதந்திரம்” பற்றிய சாத்ரே மற்றும் ஃபூக்கோவின் கருத்துக்கள்: ஒரு பகுப்பாய்வு கட்டுரைகள்

ஐரோப்பியத்‌ தத்துவ மரபில்‌ அதிகம்‌ பேசப்பட்ட எண்ணக்கருவாக சுதந்திரம்‌ காணப்படுகிறது. இருபதாம்‌ நாற்றாணழன்‌ இருபப்பியல்‌ சிந்தனையாளரான ஜீன்‌ பவுல்‌ சாத்ரே மனித சுதந்திரம்‌ பற்றி அதிகம்‌ பேசியவராவார்‌. அவர்‌ சுதந்திரம்‌ என்பதை மனிதப்‌ பிரக்ஞையின்‌ அடிப்படைப்‌ பண்பாக கருதுகிறார்‌. மனிதன்‌ வரையறையற்றவன்‌, அவன்‌ சுதந்திரமானவன்‌ என்பதன்‌ மூலம்‌ அவன் எதுவாக இருக்க வேண்டும்‌ என்பதை அவனேதான்‌ நிர்ணயித்துக்‌ கொள்கிறான்‌ என்கிறார்‌. இதற்கு மாற்றமான ரீதியில்‌ பின்நவீனத்துவச்‌ சிந்தனையாளர்‌ பூக்கோவின்‌ கருத்துக்கள் அமைந்திருந்தன. பூக்கோவின்படி மனிதர்கள்‌ சுதந்திரமானவர்கள் அல்ல. அவர்கள்‌ அதிகாரத்தின்‌ உரையாடலால்‌ கட்டுப்படுத்தப்பட்டவர்கள்‌, அதிகாரம்‌ எப்போதும்‌ அவர்களை ஒமுங்கு படுத்திக்‌ கொண்டேயிருக்கிறது என்றார். இது ”மனிதன்‌ தன்‌ சுதநதர்திதை மறுத்து தான்‌ ஏதோவொரு வகையில்‌ கடடுப்படுத்தப்படுவதாக நினைத்துக்‌ கொண்ழருக்கிறான்‌ என்ற சாத்ரேயின்‌ விளக்கத்தைப்‌ பூச்சியமாக்கி இருக்கிறது. அதாவது தீர்மானிக்கப்பட்ட எல்லைக்குள்ளேயே மனித செயற்பாடுகள்‌ அமைகின்றன அல்லது அதிதாரம்‌ தனக்கான உரையாடலை நிகழ்த்துவதன்‌ மூலம்‌ மனிதனது தெரிவுகளையும்‌ அதுவே தீர்மானிக்கிறது என்கிறார்‌ பூக்கோ. இவ்வகையில்‌ இவ்வாய்வானது ஒன்றிற்கொன்று முரணான இவ்விரு சிந்தனைகளின்‌ ஒளியில்‌ மனித சுதந்திரத்தின்‌ சாத்தியப்பாடு குறித்து ஆராய்கிறது.

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad