Type Here to Get Search Results !

கட்டுரை - இலங்கையில்‌ தற்கொலையின்‌ போக்கும்‌ சவால்களும்‌

இலங்கைச்‌ சமூகத்தில்‌ பரவிக்கொண்டிருக்கும்‌ சமமூகப்பீரச்சினைகளுள் தற்கொலையும்‌ ஒன்றாகும்‌. மூன்று தசாப்த காலமாக ஒரு சிவில் யுத்தத்தை முகங்கொடுத்த இலங்கைச்‌ சமூகம்‌, போருக்குப்‌ பின்னரும்‌ பல்வேறு சமமூகப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக்‌ தவறவில்லை, இதில்‌ பிரதானமான ஒன்றே தற்கொலையாகும்‌. மனிதன்‌ சுதந்திரப்‌ பறவையாக உலகில்‌ பிறப்பினும்‌ அவனது உயிரை அவனே எடுத்துக்கொள்வதற்கு எந்த உரிமையும்‌ இல்லை, தற்கொலை முயற்சியில்‌ ஈடுபடுவதும்‌ சட்டப்படி தண்ட னைக்குரிய குற்றமாகும்‌, இந்தவகையில்‌, சமூகவியல்‌ ரீதியாக தற்கொலை சம்பபந்தமான ஆய்வுகள்‌, கட்டுரைகள் வெளிவந்தது மிகக்குறைவாகும்‌. எனவே அதனை நவர்த்திக்கும்‌ வகையில்‌ இக்கட்டுரை எழுதப்படுகிறது. அண்மைக்காலமாக இலங்கையில்‌ தற்கொலையின்‌ போக்கு அதிகரிப்பதற்கான காரணாம்‌ என்ன, அதனைத்‌ தடுப்பதற்கான வழிமுறைகள்‌ என்ன என்பது பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின்‌ தோக்கமாகு,ம்‌, இக்கட்டுரையானது இரண்டாம்‌ நிலைத்தரவுகளை மையமாகக்கொண்டு எழுதப்படுகிறது, உலகத்தில்‌ அதிகம்‌ தற்கொலை இடம்பெறும்‌ நாடுகளில்‌ இலங்கை முக்கிய இடத்தை வகிப்பதாகவும்‌, அதில்‌ ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில்‌ தற்கொலை செய்வோரின்‌ வீதம்‌ அதிகரித்துக்‌ காணப்படுவதாகவும்‌ கட்டுரை வெளிப்படுத்து கிறது. அதிலும்‌ குறிப்பாக, சிங்கள தமிழ்‌ இனததவர்களே அதிகம்‌ தற்கொலை செய்வதாகவும்‌, போருக்குப்பிந்திய இலங்கையில்‌ வடகிழக்கில்‌ திடீரென முளைத்த தனியார்‌ வங்கிகள்‌ வழங்கிய நுண்கடன்‌ தற்கொலையைத்‌ தூண்டும்‌ முக்கிய காரணியாக இருப்பதை இக்கட்டுரை சுட்டிக்காட்‌டுகின்றது. அதிகரித்து வரும்‌ தற்கொலைதகளைக்‌ கட்டுப்படுத்துவதற்கு அல்லது தடுப்பதற்கு அரசியல்வாதிகள்‌, திட்டமிட லாளர்கள்‌, சமயத்தலைவர்கள்‌, சமூக முக்கியஸ்தர்கள்‌, புத்திஜீவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சரியான திட்டமிடல்களை மேற்கொள்வதன்‌ மூலம்‌ இப்பிரச்சினையைக்‌ தீர்க்க முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad