Type Here to Get Search Results !

பொது அறிவு வினா விடைகள் -05


ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
வோலடைல்.

தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?
கங்காரு எலி.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
ஏழு.

பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
330.

தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?
மக்ரானா.

பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன?
க்ரயோ பைட்ஸ்

டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?
வில்லியம் கோல்ப்

உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
நெதர்லாந்து.

கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?
பீச் கோம்பர்.

நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?
ஆறு தசைகள்.

அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.

நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.

மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன் ட் ரோ •போபியா.

எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.

உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.

வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.

சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க - 17 தசைகள் உம் - 43 தசைகள்

மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.

கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)

ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38 வகைகள்.

விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல்நாடு எது?
பாரதம் 1929.

உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்?

திரு. வி.பி.சிங். இவர் பதவியேற்ற இரண்டாவது சந்திப்பில் 800 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு டெல்லி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் 2 மணி நேரம்வரை பதில் அளித்து உலக சாதனை புரிந்தார்.

உலகின் மிகச் சிறிய சந்து எது?
புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்.

உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?
ஸ்வீடன்.

இந்திய விமானப்படையின் வாசகம் எது?
Touch of the glory.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad